பசுமாட்டை கற்பழித்த வட மாநிலத்தவர்களுக்கு சரமாரி அடி உதை!

செப்டம்பர் 04, 2019 691

திருப்பூர் (04 செப் 2019): திருப்பூர் பசுமாட்டை கடத்தி கற்பழித்த வட மாநிலத்தவரை பொதுமக்கள் சரமாரியாக அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ளது பெருமா கவுண்டன்பாளையம். இங்கு வசித்து வருபவர் கந்தசாமி என்ற விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு உள்ளது. ஆனால் அது பல நாட்களாக சோர்வாக காணப் பட்டது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு பசுமாட்டை வெளியே கட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் மாடு கத்தும் சப்தம் கேட்டு விழித்த கந்தசாமி, உடனே வெளியே வந்து பார்த்தார். ஆனால் பசுமாட்டை காணவில்லை. பல இடங்களில் தேட ஆரம்பித்தார்.

அப்போது அருகில் உள்ள கோழிப்பண்ணை ரூமில் இருந்து சப்தம் வருவதை கவனித்த அதனுள் சென்று பார்த்தார். அப்போது, பசுமாட்டினை அந்த அறையில் வைத்து மூன்று இளைஞர்கள் கற்பழித்துக் கொண்டு இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கந்தசாமி, அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து, சரமாரியாக அடி கொடுத்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் 3 பேரும் அருகில் உள்ள கல்குவாரியில் வேலை செய்பவர்கள் என்பதும், 3 பேருமே வடமாநில இளைஞர்கள் என்பதும் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...