விநாயகர் ஊர்வலத்தை புறக்கணிப்போம் - தலித் மக்கள் வைத்த பிளக்ஸால் பரபரப்பு!

செப்டம்பர் 04, 2019 382

கும்பகோணம் (04 செப் 2019): பார்ப்பன கடவுளான விநாயகர் சிலையை புறக்கணிப்போம் என்று தலித் மக்கள் வைத்த தட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டுகருப்பூரில் தலித் மக்கள் "பார்ப்பன கடவுளான விநாயகர் சிலை ஊர்வலத்தை புறக்கணிப்போம்" என்று தட்டி வைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இதனை அடுத்து கும்பகோணம் தாலுக்கா போலீசார், இது ஜாதி மோதலை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் தட்டியை அப்புறப்படுத்தியதோடு, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...