ப.சிதம்பரம் கைதின் காரணம் இதுதான் - ஸ்டலின் பளீர்!

செப்டம்பர் 04, 2019 451

சென்னை (04 செப் 2019): பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தின் மேலாளர் பத்மநாபன் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசுகையில்; ‘பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே சிதம்பரம் கைது, காஷ்மீர் விவகாரத்தை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார நிலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகி வருகிறது; இதற்கு நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்’ என்றார்.

மேலும், தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறியுள்ளது எனக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், இன்னும் 7,8 அமைச்சர்கள் வெளிநாடு செல்லவிருக்கும் செய்தி தமக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். இரு முறை நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், அவற்றின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...