விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கோவிலுக்கு வந்த எச் ராஜா விரட்டியடிப்பு!

செப்டம்பர் 04, 2019 708

கடலூர் (04 செப் 2019): கடலூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி கோவிலுக்கு வர இருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை உள்ளே நுழைய விடாமல் பொதுமக்கள் தடுத்ததால் அவர் திரும்பிச் சென்றார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஒரே சமுகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் கோவில் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வரும் ஒரு தரப்பினர், விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை வரவேற்று சுவரொட்டிகளை கிராமத்தில் ஒட்டியிருந்தனர்.

இந்த நிலையில் இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., தி.மு.க.மற்றும் கிராம மக்கள் சார்பில் எச்.ராஜா வந்தால் கிராமத்தில மோதல் உருவாகும். இந்து அதர்ம கொள்கைவாதி எச்.ராஜா கிராமத்தில் உள்ளே வரக்கூடாது என பதிலுக்கு சுவரொட்டிகள் ஒட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அவர வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் மக்கள் திரண்டனர். இதுபற்றி தகவலறிந்த வேப்பூர் போலீசார் விரைந்து சென்று அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்ததுடன், தங்கள் கிராமத்திற்குள் எச்.ராஜா வரக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து போலீசார் எச்.ராஜாவிடம் நிலைமையை எடுத்து கூறினர். மேலும் காரில் இருந்து கிழே இறங்கி உள்ளே செல்ல முற்பட்டார். அப்போது கருப்பு கொடிகாட்டி கோஷம் எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து காரில் திரும்பிச் சென்றார்.

இதனால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...