அதிராம்பட்டினம் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் மக்கள் அவதி!

செப்டம்பர் 04, 2019 168

அதிராம்பட்டினம் (04 செப் 2019): அதிராம்பட்டினம் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியுறுகின்றனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் ஏடிஎம் மெஷின்கள் இயங்கி வருகின்றன.

ஆனால் அங்குள்ள மெஷின்களில் அடிக்கடி பணம் இல்லாமல் போவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். பண்டிகை காலம் என்பதால் குறிப்பாக கடந்த சில நாட்களாக ஏடிஎம் மெஷின்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்த்து ஆராய்ந்து வங்கிகளின் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...