முழு பாஜகவாக மாறிய ஓபிஎஸ் மகன்!

செப்டம்பர் 05, 2019 356

கம்பம் (05 செப் 2019): விநாயகர் சதூர்த்தி விழாவில் ரவீந்திரநாத் எம்பி, நான் முதலில் இந்து அப்புறம்தான் எல்லாமே என்று பேசியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்பம் அருகே சின்னமனுரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல விழாவில் ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் பேசும் போது, நாம் முதலில் இந்து அப்புறம் தான் மற்ற எல்லாம் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, வலிமையாக புதிய இந்தியாவையும், புதிய பாரத்தையும் உருவாக்க பட வேண்டும் என்று கூறினார்.

உலக நாடுகளில் இந்தியா ஒரு வல்லரசு நாடக உருவாக வேண்டும் என்பதற்காக, நமக்குள்ள இருக்கின்ற ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

ஏற்கனவே, அதிமுக கட்சியினர் முத்தலாக் மசோதாவில் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்த போதும், நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு கொடுத்தது அதிமுக கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நான் இந்து அப்புறம் தான் எல்லாம் என்று ஓபிஎஸ் மகன் பேசியது மீண்டும் அரசியலில் பரபரப்பாகி உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...