பொருளாதார வீழ்ச்சி எதிரொலி - அசோக் லேலாண்ட் உற்பத்தி மீண்டும் நிறுத்தம்!

செப்டம்பர் 05, 2019 384

எண்ணூர் (05 செப் 2019): ஆட்டோ மொபைல் தொழில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அசோக் லேலண்ட் ஊழியர்களுக்கு மீண்டும் கட்டாய விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் படு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் பல ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. அந்த வகையில் சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் உற்பத்தியை குறைத்துள்ளது. மேலும் அதன் ஊழியர்களுக்கு வரும் 6 ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு கட்டாய விடுமுறை அறிவித்துள்ளது.

ஏற்கனவே அசோக் லேலண்ட் நிறுவனத்தில் 10 நாட்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...