முத்துப்பேட்டையில் போலீசார் குவிப்பு!

செப்டம்பர் 05, 2019 503

முத்துப்பேட்டை (05 செப் 2019): முத்துப்பேட்டையில் நாளை நடைபெறவுள்ள விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக 2500 போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

முத்துப்பேட்டையில் நாளை (செப்டம்பர் 6-ஆம் தேதி) விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. அங்கு விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. காவல் துறையைப் பொருத்தமட்டில் சுமார் 2,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகளில் சுமார் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊர்வலத்தையொட்டி 4 நிலையான மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர் ஊர்வலத்திற்கு முன்னும் பின்னும் 108 ஆம்புலன்ஸ் வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கண்காணிப்பு பணியில் 90 வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் ஊர்வலத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி ஊர்வலம் நடைபெறும் வகையில் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...