விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும்போது ஆற்றில் அடித்துச் செல்லப் பட்ட நபர்!

செப்டம்பர் 06, 2019 299

கோவை (06 செப் 2019): கோவை நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

கோவை இக்கரை போலுவம்பட்டி அருகே விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கச் செல்லும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். கோவை விராலியூர் பகுதியை சேர்ந்தவர் ராமு. ஆலந்துறையை அடுத்த இக்கரை போலுவம்பட்டி பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் 4 அடி உள்ள விநாயகர் சிலையுடன் நேற்று மாலை சென்றார்.

அப்போது ஆற்றில் நீர் அதிகமாக வந்துள்ளது. இதில் சிலை கரைக்கும் போது ராமு நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப்பார்த்த அவரது சகோதரர் மணிகண்டன் ராமுவை காப்பாற்ற ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரும் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...