மீட்கப் பட்ட மீனவர்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதி!

செப்டம்பர் 06, 2019 383

பட்டுக்கோட்டை (06 செப் 2019): வங்கக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மீனவர்களில் நேற்று 4 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மல்லிப்பட்டினம் கடற்பகுதியில் காணாமல் போன ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்களில் 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் மீதமுள்ள 4 மீனவர்களின் நிலை குறித்து தற்போது மீனவத்துறை அதிகாரிகள், கடலோர காவல்படை இவர்களுடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் தேடி வருகிறார்கள். இதனிடையே அந்த 4 மீனவர்களின் உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ராமேஸ்வரம் அடுத்த நடராஜபுரம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் தான் கடந்த திங்கட்கிழமை கடலூரில் இருந்து புதிய படகில் இரவோடு இரவாக ராமேஸ்வரம் புறப்பட்டு வரும்போது சூறாவளி காற்றின் காரணமாக படகானது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. விபத்து ஏற்பட்ட போது உடனடியாக 2 பேர் மட்டும் அருகில் இருந்த மீனவர்கள் மூலம் காப்பாற்றப்பட்டு கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டனர்.

அதோடு மீதமுள்ள மீனவர்கள் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் நேற்று மாலை மல்லிப்பட்டினம் கடற்கரை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள 4 பேரை தேடும் பணி நேற்று ஹெலிகாப்டர் உதவியுடன் நடைபெற்றது. இன்று மீண்டும் தேடும் பணியில் அதிகாரிகளும் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அவர்களுடைய உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...