ஆச்சி மசாலாவுக்கு தடையா? - நிர்வாகம் விளக்கம்!

செப்டம்பர் 08, 2019 459

சென்னை (08 செப் 2019): ஆச்சி மசாலா தூளில் கலப்படம் உள்ளதாக செய்தி வெளியானதற்கு மறுப்பு தெரிவித்து அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மசாலா தூள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மீது கேரளாவில் தடை விதிக்கப் பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆச்சி மசாலா பொருட்கள் குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை எனவும், அது முற்றிலும் வதந்தி எனவும் குறிப்பிட்டு அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஆச்சி மசாலா நிறுவனத்தைப் பற்றி வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க தவறான தகவலாகும். இதனை யாரும் நம்ப வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆச்சி மசாலா பொருட்கள் அனைத்தும் இயற்கை குணம் அழியாமல் இயற்கையான முறையிலேயே காய வைத்து அரைத்து விநியோகிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...