மதத்தை காட்டி காதலுக்கு தடை - காதலி முன் தீவைத்துக் கொண்டு உயிரிழந்த முஸ்லிம் இளைஞர்!

செப்டம்பர் 08, 2019 610

சென்னை (08 செப் 2019): வேறொரு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி முன்பு காதலன் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையை அடுத்த எர்ணாவூரை சேர்ந்தவர் மொய்தீன். இவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இதே நிறுவனத்தில் சென்னை எர்ணாவூர் நேதாஜி நகரை சேர்ந்த இளம்பெண் பணிபுரிந்தர். இவருக்கும் மொய்தீனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப்பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது.

இவர்களின் காதலுக்கு மதத்தின் பெயரால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணை வேலைக்கு அனுப்பாமல், அவரது குடும்பத்தார் தடுத்து நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில், காதலியின் வீட்டிற்கு சென்ற மொய்தீன் ஏன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு தன்னை மறந்துவிடுமாறு சொல்லிவிட்டு அந்தப்பெண் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

இதனால் விரக்தியடைந்த மொய்தீன் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீவைத்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் மொய்தீனின் உடலில் பற்றியிருந்த தீயை அனைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மொய்தீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...