தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு?

செப்டம்பர் 09, 2019 548

சென்னை (09 செப் 2019): தமிழகத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், மின் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த வாரம் நடந்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய மாநில ஆலோசனைக் கூட்டத்தில் கட்டணம் உயர்வு குறித்து முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, வீட்டு உபயோக சிங்கிள் பேஸ் ஒரு கிலோவாட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 200 முதல் 1000 வரை பாதுகாப்பு கட்டணம் உயரலாம் என்றும் இதே மூன்று பேஸ் இணைப்பு பெறுவோருக்கு கட்டண உயர்வு என்பது ஒரு கிலோவாட்க்கு ரூபாய் 600 முதல் 1800 வரை உயர வாய்ப்பு என்றும் தெரிகிறது.

இதேபோல் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர வாய்ப்பு உள்ளது. தற்போது வணிகரீதியான பயன்பாட்டிற்கு ஒரு கிலோவாட் புதிய மின் இணைப்பிற்கு 500 ரூபாய் இருக்கும் கட்டணம் 2000 ரூபாயாக உயரக்கூடும்.

தற்போது மின்சார பிரச்னை ஏற்பட்டால் மின் ஊழியர்கள் வந்து ஆய்வு செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இனிவரும் காலங்களில் ஆய்வு செய்வதற்கு வீட்டு உபயோக இணைப்புக்கு 580 முதல் 1920 வரை கட்டணம் வசூலிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...