சென்னையில் டெங்கு காய்ச்சல்!

செப்டம்பர் 09, 2019 354

சென்னை (09 செப் 2019): சென்னையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் தினமும் நான்கு நோயாளிகள் அனுமதிக்கப் படுவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து .மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி, “மருத்துவமனையில் பருவக்காலங்களில் உருவாகும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு 30 லிருந்து 40 புறநோயாளிகளும் 10 லிருந்து 15 உள் நோயாளிகளும் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கான பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் கண்காணிப்பும் மேல் சிகிச்சைக்காக ஐ.சி.யு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.

அனைத்து மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களும் தயார் நிலையில் உள்ளது. நூறு படுக்கை வசதி கொண்ட பிரத்யேக வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது. நோய் பரவாமல் இருக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு 3 பேர் வீதம் டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இந்த வருடத்தில் இங்கு டெங்கு பாதிப்பு உயிரிழப்பு எதுவும் நடக்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...