மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது!

செப்டம்பர் 10, 2019 362

தர்மபுரி (10 செப் 2019): மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பூச்சூர் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி என்பவர் மீது, மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

ஆத்திரம் அடைந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...