நாடு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி - புறக்கணித்த ஓ.பன்னீர் செல்வம்!

செப்டம்பர் 10, 2019 381

சென்னை (10 செப் 2019): பல்வேறு நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் பழனிச்சாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பபழனிசாமி அதிகாலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், துரைகண்ணு ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.

வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்ற நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...