சேறும் சகதியுமான அதிராம்பட்டினம் கடற்கரை - தூர்வார மீனவர்கள் கோரிக்கை

செப்டம்பர் 10, 2019 314

பட்டுக்கோட்டை (10 செப் 2019): அதிராம்பட்டினத்தில் கடற்கரை சேறும் சகதியுமாக இருப்பதால் தூர் வார வேண்டி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் கடலின் தரைப்பகுதியில் உள்ள சேறு அனைத்தும் துறைமுக வாய்க்காலில் வந்து விடுவதால் மீனவர்கள் தங்களது படகுகளை எடுக்க வாய்க்காலில் இறங்கும்போது முழங்கால் அளவுக்கு சேறு இருப்பதால் நடக்க முடியாமலும் படகுகளை எடுத்து செல்லவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதனாலேயே பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டாமல் இருந்து விடுகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் கடல் சீற்றத்தால் இந்த பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவம் நடந்து வருகிறது.

எனவே மீனவர்களின் நிலை கருதி அரசு உடனடியாக துறைமுக வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...