தொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை!

செப்டம்பர் 12, 2019 855

சென்னை ( 12 செப் 2019): சென்னையில் லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை சேர்மேன் ஆன ரீட்டா இன்று காலை சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் தமிழகத்தின் டீலரான லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து வருபவர் தொழிலதிபர் லங்கலிங்கம். இவரது மனைவி ரீட்டா லங்காலிங்கம் இதே நிறுவனத்தில் இணை சேர்மேனாக இருந்து வருகிறார். இவர்களுக்கு லாவண்யா என்ற பெண்ணும் லிவாஸ் என்ற மகனும் உள்ளனர். இதில் லாவண்யா என்பவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். மகன் லிவாஸ் திருமணமாகி சென்னையில் தொழிலை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையின் காரணமாக இவர்களது நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் இரு தினங்களுக்கு முன்பாக தமிழகத்திலுள்ள அனைத்து கிளை லான்சன் டொயோட்டோ நிறுவனத்தின் மேலாளர்களுடன் ரீட்டா லங்காலிங்கம் தொழில் நலிவு குறித்து சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியதாகவும், அந்த சந்திப்பில் மேலாளர்களை கடுமையாக இவர் திட்டியதாகவும் அந்த காரணத்தினால் கணவன்-மனைவிக்குள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ரீட்டாவின் வீட்டுக்கு சென்ற சூப்பர்வைசர் இயேசுபாதம் என்பவர் ரீட்டா தற்கொலை செய்துகொண்ட விஷயத்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக ரீட்டாவின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை பற்றி தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...