பேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கடும் கண்டனம்!

செப்டம்பர் 13, 2019 413

சென்னை (13 செப் 2019): தாம்பரம் அருகே பேனர் விழுந்து இளம்பெண் பலியானதற்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

விதிமீறி பேனர்கள் வைப்பது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்பு, சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற பெண் மீது பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் அப்பெண் மரணம் அடைந்தது குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பதில் விதி மீறி பேனர் வைப்பது நீடிக்கிறது. உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தந்தால் போதும் என்று அரசு கருதுவதே காரணம். சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் உயிரிழப்புக்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கேக் காரணம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...