பால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி!

செப்டம்பர் 15, 2019 220

சென்னை (15 செப் 2019): பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் தயாரிப்பு பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 விற்பனை விலையை அதிகரித்து அறிவித்த தமிழக அரசு, கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் அதனை அமல்படுத்தியது.

இந்நிலையில் ஆவின் தயாரிப்பு பொருட்கள் அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.30, பால் பௌடர் ஒரு கிலோ ரூ.50, பன்னீர் ஒரு கிலோ ரூ.50, வெண்ணெய் ஒரு கிலோ ரூ.20, பால்கோவா ஒரு கிலோ ரூ.20, தயிர் அரை லிட்டர் ரூ.2 உயர்த்தி தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

நெய் லிட்டருக்கு ரூ.460-லிருந்து ரூ.495-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பால் பௌடர் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.320-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பால்கோவா கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.520-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரைலிட்டர் தயிர் ரூ.2 உயர்ந்து ரூ.27-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை உயர்வானது புதன்கிழமை (செப். 18) முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...