நாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்!

செப்டம்பர் 18, 2019 846

சென்னை (18 செப் 2019): புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான அபராத தொகையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை ஒருநாள் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறுகிறது.

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிகப்படியான அபராத தொகையை விதித்து மத்திய அரசு அறிவித்தது. இந்த அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும், லாரி தொழிலை அரசு பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் நாளை (19-ந்தேதி) ஒரு நாள் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறுகிறது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...