இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இதுதானா?

செப்டம்பர் 19, 2019 1135

சென்னை (19 செப் 2019): இந்தி திணிப்புக்கு எதிரான திமுக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் மறைமுக மிரட்டலே காரணம் என்று பலராலும் கருதப்படுகிறது.

இந்தி மொழி குறித்தும் அது தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்தும் அமித்ஷா பேசியது சர்ச்சையானது. மேலும் பலரும் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20ம் தேதி நடத்தப்படவிருந்த திமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில் தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் இதை சிலர் அரசியலாக்குகின்றனர். என்றும் அதை அரசியலாக்குவது அவர்களின் விருப்பம் என்றும் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே பா.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் உள்ள நிலையில் அடுத்து தமிழகத்தை சேர்ந்த முக்கிய தலைவர் கைதாவார் என்று பாஜகவினர் மிரட்டி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் திமுக அறிவித்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. மேலும் ஸ்டாலின் பயந்து விட்டாரா? என்றும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...