சென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ!

செப்டம்பர் 20, 2019 568

சென்னை (20 செப் 2019): பேராசிரியைகளின் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஆடியோ ஒன்றை மாணவி வெளியிட்டதைத் தொடா்ந்து, ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவா், தற்கொலை ஆடியோ ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டார். அதில், கல்லூரி முதல்வா் மீதான காழ்ப்புணா்ச்சி காரணமாக, அவா் மீது பாலியல் புகார் அளிக்குமாறு தன்னையும், மற்றொரு மாணவியையும் பெண் பேராசிரியா் ஒருவரும், வார்டனும் தொடா் நெருக்கடி அளிப்பதாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் அந்த ஆடியோவில் அவா் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மாணவியின் இந்த நிலைக்குக் காரணமாக பேராசிரியைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அங்கு பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த விவகாரம் தொடா்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவா்கள் வலியுறுத்தினா்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...