வரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ!

செப்டம்பர் 21, 2019 352

சென்னை (21 செப் 2019): வரதட்சனை கேட்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மருமகளை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ராமமோகன ராவின் மகன் வஸிஸ்தா என்பவருக்கும், சிந்து ஷர்மா என்வருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிந்து ஷர்மாவிடம் கணவர் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிந்து ஷர்மா புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிந்து ஷர்மா தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. குழந்தைகளின் கண் முன் தாய் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமமோகன ராவ் ஐதராபாத் உயர் நீதிமன்றத்திலும் நீதிபதியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...