பொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக!

செப்டம்பர் 21, 2019 148

சென்னை (21 செப் 2019): தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...