புரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்!

செப்டம்பர் 21, 2019 279

சென்னை (21 செப் 2019): வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் ஜூலியஸ். இவருடைய மனைவி சாந்தி. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஜூலியஸுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் திருமணமாகி பெங்களுருவில் வசித்து வருகிறார். இரண்டாவது மகளான தனிதா ஜூலியஸ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலைக்காகச் சென்னைக்கு வந்துள்ளார். முதலில் வடபழனியில் வேலை பார்த்த அவர், பின்பு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இதனிடையே அம்பத்தூரில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அன்று, அலுவலகத்தின் 9 வது தளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தனிதா ஜூலியஸ் தனது அலுவலகம் இருக்கும் 2-வது தளத்திலிருந்து 9-வது தளத்தில் உள்ள உணவகத்துக்குப் படி வழியாக ஏறிச் சென்றுள்ளார். அப்போது 8-வது மாடியிலிருந்து அவர் கீழே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள் ''தனிதா கீழே விழுந்ததில் கை, கால்கள் மற்றும் உடலில் உள்ள எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளன. தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது பிரதே பரிசோதையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

எனினும் தனிதா ஜூலியஸ் இறப்பதற்கு முன் அவர் யார், யாருடன் பேசினார் என்பது குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தனிதா தன்னுடைய இருக்கையிலிருந்து தனிதா எழுந்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. ஆனால், மாடிப்படி பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அங்கு தனிதா சென்ற காட்சிகள் பதிவாகவில்லை. இதற்கிடையே தனிதா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும், அவர் தவறி விழுந்துதான் இறந்திருக்க வேண்டும் என காவல்துறையினர் கூறியுள்ளார்கள். இருப்பினும் முழுமையான விசாரணை முடிந்த பிறகு தான் தனிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்கள் வெளிப்படும் என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...