நாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்டம்!

செப்டம்பர் 22, 2019 183

சென்னை (22 செப் 2019): நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜர் நகர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் காலியாக இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன.

இதற்கிடையே, நாங்குநேரி , விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...