மீண்டும் அழ வைக்கும் வெங்காயம்!

செப்டம்பர் 22, 2019 203

சென்னை (22 செப் 2019): வெங்காய விலை அவ்வப்போது ஏற்றம் கண்டு மக்களை திக்கு முக்காட வைக்கிறது.

இந்தியாவில் அனைத்து உணவுகளுக்கும் முக்கிய வஸ்துவாக விளங்குவது வெங்காயம். வட மாநிலங்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் நாடு முழுவதும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வட மாநிலங்களில் மழைப்பொழிவு மற்றும் வெள்ள பெருக்கின் காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சேமித்து வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளும் வெள்ளத்தால் அழுகி போய்விட்டன. இதனால் தேசிய அளவில் வெங்காயத்தில் விலை உயர தொடங்கியிருக்கிறது.

மஹாராஷ்டிராவில் உள்ள நாசிக் சந்தையிலிருந்துதான் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் வெங்காயம் குவிண்டாலுக்கு 1000 ரூபாய் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒவ்வொரு நாளும் 15 குவிண்டால்கள் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது வெறும் 10 குவிண்டால்கள் மற்றுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தேசிய அளவில் வெங்காய பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது கிலோ 50 ரூபாய் விற்று வரும் பெரிய பல்லாரி வெங்காயம் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...