நாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நாம் தமிழர் போட்டி!

செப்டம்பர் 22, 2019 170

சென்னை (22 செப் 2019): நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் நாம்தமிழர் கட்சி போட்டியிடும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் போட்டியிட ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. இந்த நிலையில் இந்த இரு தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருக்கிறார்.

நாம்தமிழர் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. மேலும் தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது.

தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண முடிவு செய்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆண், பெண்ணுக்கு சரி பாதியாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாங்குநேரி தொகுதியில் பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி தொகுதியில் ஆண் வேட்பாளரும் நிறுத்தப்படுகிறார்கள்.

இது தொடர்பாக இன்று தாம்பரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்னர் அவர் வேட்பாளர்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...