ஜித்தா தமிழ் சங்கம் மற்றும் கிரீன் நாடா சுற்றுச் சூழல் அமைப்பின் கின்னஸ் சாதனை முயற்சி!

செப்டம்பர் 22, 2019 469

நீடாமங்கலம் (22 செப் 2019): கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஜெத்தா தமிழ்ச்சங்கம் சவுதி அரேபியா இணைந்து கின்னஸ் சாதனை முயற்சியாக 2000 பனை விதைகள் விதைக்கப் பட்டன.

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஜெத்தா தமிழ்ச்சங்கம் சவுதி அரேபியா இணைந்து முன்னெடுத்து உருவாக்கிய குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு விழா,மற்றும் கின்னஸ் உலக சாதனை முயற்சியாக 2000 பனை விதைகள் விதைப்பு திருவிழா நீடாமங்கலம் அடுத்த கானூர் ஊராட்சியில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு நிறுவனர் மு.ராஜவேலு தலைமையில் நடைபெற்றது.

கிரீன் நீடா நகர அமைப்பாளர் கே.ஜானகிராமன் வரவேற்றார். பூவனூர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் விசு.அண்ணாதுரை, ஜெத்தா தமிழ்ச்சங்கம் செயற்குழு உறுப்பினர்கள் ரஃபியா, விஜயன், அப்துல் அஜீஸ், கிரீன் நீடா அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் இராம.கந்தசாமி, கானூர் கிராம முக்கியஸ்தர்கள் ராஜேந்திரன், நவநீதம் முன்னிலை வகித்தனர்.

குளத்தினை பொதுமக்களுக்கு அர்பணித்து, 2000 பனை விதைகளை விதைத்து மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், குடிமராமத்துப்பணிகளை ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே தொடங்கி முடித்திட வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் மராமத்துப்பணிகள் சரிவர நடைபெறவில்லை. அரசின் திட்டங்கள் சரியான முறையில் செய்யப்படுகிறதா என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும், பஸ் டிக்கெட் எடுத்தால் கூட அதிலும் நம் வரிப் பணம் செல்கிறது, நமது வரிப்பணத்தில் நடக்கும் அரசு திட்டப்பணிகளில் ஊழல் நடக்காமல் இளைஞர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும், மாற்றம் நாம் வசிக்கும் தெருவில் இருந்தே தொடங்க வேண்டும் மாணவர்களால் முடியாதது ஒன்றுமே இல்லை. ஊர் மீது நாம் பற்றுள்ளவராக இருக்க வேண்டும், எனது இன்ஸிலலில் வரும் டி தளிக்கோட்டையை குறிக்கிறது, அனைவரும் தங்கள் தந்தை பெருக்கு முன்னால் ஊர் பெயருரை இணைத்துக் கொள்ளுங்கள் என்றார். நிகழ்வில் ஹோப் லேர்னிங் மாணவர்கள் 50 பேர்கள், மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பனை விதைகளை விதைத்தார்.

விழாவில் தொழிற்சங்க தலைவர் ஜெ.குணசேகரன், நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் ஆர்.ராஜாராமன், மன்னார்குடி நேசக்கரம் தலைவர் ஆர்.வி.ஆனந்த், பசுமை கரங்கள் தலைவர் ஆர்.கைலாசம், மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் பிரபாகரன், மகிழங்காடு மக்கள் மன்ற தலைவர் ச.மலர்மன்னன், பாரம்பரிய நெல் ரகங்கள் சேகரிப்பாளர் பசுமை எட்வின், கிரீன் நீடா தஞ்சாவூர் அமைப்பாளர் சண்முக வடிவேலன்,, பூண்டி அமைப்பாளர் வில்லியம் ஸ்டீபன்சன், ஹோப் சென்டர் ஒருங்கிணைப்பாளர் நாகராணி உள்ளிட்டோர் பேசினர். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் நன்றி கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...