சுபஸ்ரீ மரணம் குறித்து பிரேமலதா திமிர் பேச்சு!

செப்டம்பர் 24, 2019 309

சென்னை (24 செப் 2019): சுபஸ்ரீ பேனர் விழுந்து உயிரிழந்தது அவரது தலைவிதி என்று பிரேமலதா விஜய்காந்த் பேசியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ. இவர் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சட்டவிரோதமாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண ‘பேனர்’ சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதனால் நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது, பின்னால் வேகமாக வந்த லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார். இச்சம்பவம் தமிழகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரேமலதா விஜய் காந்த், சுபஸ்ரீ பலியானது பேனரால் அல்ல என்றும், அது அவரது தலை விதி, அவர் வந்த நேரத்தில் பேனர் அவரது மீது விழுந்ததாகவும், பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது எல்லாமே அவரது தலை விதி என்றும் திமிர்த்தனமாக பேசியுள்ளார்.

பிரேமலதாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...