வாட்ஸ் அப்பில் வைரலான ஆசிரியர் - ஆசிரியை உல்லாச வீடியோ!

செப்டம்பர் 24, 2019 3181

தேனி (24 செப் 2019): ஆசிரியரும் ஆசிரியையும் உல்லாசமாக இருந்ததை தவறுதலாக வாட்ஸ் அப் குரூப்புக்கு அனுப்பி இருவரும் வசமாக சிக்கிக் கொண்டனர்.

தேனி அருகே உத்தமபாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.இங்கு வெறும் 4 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.ஆசிரியர் ஒருவர் வேலை பார்க்கிறார்.அவருக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளன.அதே பகுதியில் இன்னொரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.அங்கு வேலை பார்க்கும் ஒரு டீச்சருக்கும்,இந்த ஆசிரியருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் நெருங்கிப்பழகி ஆசிரியரின் பள்ளியில் உள்ள வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை புகைப்படங்கள் எடுத்த ஆசிரியர் வீடியோவாக தொகுத்து வைத்துள்ளார்.ஆசிரியர் தவறுதலாக இந்த வீடியோவை சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்து விட்டார்.இதனால் இவர்கள் இருவருக்குமான உறவு வெளியுலகிற்கு தெரியவந்தது.இதை அறிந்த அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகம்,அந்த ஆசிரியரை சஸ்பெண்டு செய்தது.அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியையும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே இவ்வாறு இருக்கலாமா?என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...