மர்ம பொருள் வெடித்து சாமியார் பலி - திருவள்ளூர் அருகே பரபரப்பு!

செப்டம்பர் 26, 2019 289

திருவள்ளூர் (26 செப் 2019); திருவள்ளூர் அருகே பூஜை அறையில் மர்ம பொருள் வெடித்து சாமியார் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த இறையாமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் என்றா சாமியார். 45 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. சித்தவைத்தியம், ஜோதிடம், யோகாவும் தெரியும்

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த இளம்பெண் லாவண்யா என்பவர் கோவிந்தராஜ் வீட்டில் வந்து தங்கினார். நேற்று மாலை வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமியார் கோவிந்தராஜ் பூஜை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென அங்கிருந்த மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் கோவிந்தராஜ் உடலில் தீப்பிடித்தது. அலறியபடி அவர் வீட்டில் இருந்து வெளியே ஓடினார்.

சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த லாவண்யா வெளியே வந்தபோது கோவிந்தராஜ் உடல் கருகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடலில் பலத்த தீக்காயம் அடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் மப்பேடு போலீசார் விரைந்து வந்து கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்களை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரினி தலைமையில் தடவியல் நிபுணர் நளினா மற்றும் அதிகாரிகள் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்..

மேலும் பூஜை அறையில் ரத்தக்கறை சிதறி கிடக்கிறது. தீப்பற்றும்போது ரத்தக்கறை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கோவிந்தராஜ் உடல் பரிசோதனை முடிவை வைத்து மேலும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக உடன் தங்கி இருந்த பெண்ணிடமும் விசாரணை நடக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...