காவிரி கரையோர மக்களுக்கு தஞ்சை கலெக்டர் வேண்டுகோள்!

செப்டம்பர் 26, 2019 185

தஞ்சை (26 செப் 2019): மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி தஞ்சை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. இதனால் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் தஞ்சை மாவட்டம், காவிரி, கொள்ளிடம் கிளை ஆறுகளின் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...