எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் மரணம்!

செப்டம்பர் 30, 2019 404

திருப்பூர் (30 செப் 2019): எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், தற்போதைய மாநில பேச்சாளருமான மதுரை நெல்பேட்டையை சேர்ந்த கே.செய்யது இப்ராஹிம் அவர்கள் காலமாகி விட்டார்கள்.

திருப்பூரில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கே. செய்யது இப்ராஹிம் SDPI கட்சியின் மதுரை மாவட்ட தலைவராகவும், மாநில செயலாளராகவும் பணியாற்றியதோடு, தற்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கல்வித்துறை ஒருங்கிணைப்பாளராகவும், மாநில ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

அவரது மறைவுக்கு எஸ்டிபிஐ நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...