நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவரே கமல்தான் - பகீர் கிளப்பும் அமைச்சர்!

அக்டோபர் 02, 2019 299

சென்னை (02 அக் 2019): நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவரே கமல்தான் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பிக்பாஸ் வீட்டிக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அது அலிபாபா குகை போல உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மூலம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்துக்கு வித்திட்டவர் நடிகர் கமல் தான் என்று கூறியுள்ளார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில், மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக கமலுக்கு பதில் மருத்துவராக இருக்கும் கிரேஸி மோகன் தேர்வு எழுதுவார். இதற்காக கிரேஸி மோகனின் தந்தையை கமலின் நண்பர்கள் குழு கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள். இதை வைத்து அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

இப்போது நீட் தேர்வில் ஒரு மாணவருக்கு பதிலாக வேறு ஒரு மாணவரின் புகைப்படத்தையே ஹால் டிக்கெட்டில் ஒட்டி அவரே தேர்வெழுதி, வேறு ஒரு மாணவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...