முஸ்லிம் அகதிகள் குறித்த அமீத்ஷாவின் பேச்சுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்!

அக்டோபர் 03, 2019 567

சென்னை (03 அக் 2019): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முஸ்லிம்கள் குறித்து பேசியதற்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, இந்தியாவில் உள்ள இந்து, சீக்கிய, கிறிஸ்தவ, புத்தமத அகதிகள் இங்கேயே இருப்பார்கள் என்றும் முஸ்லிம் அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றப் படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

அமித்ஷாவின் இந்த பேச்சு நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சித்தார்த், அமித்ஷா இவ்வாறு பேசியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதல்லவா? இப்போது பிரிவினைவாதங்களை பகிரங்கமாகவே அறிவிக்க ஆரம்பித்துவிட்டனர். நாடு எந்த திசையில் சென்று கொண்டுள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவை சித்தார்த் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...