திருச்சி நகைக்கடை கொள்ளையன் ஒருவன் அதிரடி கைது!

அக்டோபர் 04, 2019 383

திருச்சி (04 அக் 2019): திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையன் ஒருவனை போலீசார் திருவாரூரில் வைத்து கைது செய்துள்ளனர்.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ.12 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 28 கிலோ தங்க நகைகள், 79 லட்சம் மதிப்புள்ள 1 கிலோவுக்கும் அதிகமான வைரம் மற்றும் பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வடநாட்டினர் ஈடுபட்டிருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.

இந்நிலையில் திருவாரூர், மடப்புரம் பாலம் அருகில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டன் என்ற ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணிகண்டனுடன் வந்த இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார்.

இவர் திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர் சீராத்தோப்பை சுரேஷ் என தெரிந்தது. கைப்பற்றப்பட்ட 5 கிலோ நகைகளும் திருச்சி லலிதா ஜுவல்லரியை சேர்ந்த நகைகள் என தெரியவந்தது.சுரேஷை போலீசார் தேடிவருகின்றனர். இருவடனும், வேறு யாரேனும் தொடர்பு வைத்துள்ளனரா என்றும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...