அரசு வழங்கும் மாத்திரையில் ஆபத்து!

அக்டோபர் 04, 2019 281

சேலம் (04 அக 2019): சேலத்தில் அரசு மருத்துவமனையில் வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கோவையில் பல் வலிக்கு வழங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து விலகாத நிலையில், மீண்டும் அதுபோன்றதொரு சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளமை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் மாவட்டம், சங்ககிரி, மோரூர் மேற்கு ஊராட்சியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 29; ஓட்டுனர். இவரது, 6 வயது பெண் குழந்தைக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதனால், கடந்த, 1ல், புள்ளிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சிறுமியை அழைத்துச் சென்றார்.

அங்கு, சிறுமியை பரிசோதித்த டாக்டர், மூன்று மாத்திரைகளை கொடுத்தார். நேற்று முன்தினம் வரை, இரு மாத்திரையை, சிறுமிக்கு கொடுத்து உள்ளனர்.நேற்று காலை, மீதமுள்ள ஒரு மாத்திரையை, சிறுமி விழுங்க மறுத்தார். இதனால் பெற்றோர், அந்த மாத்திரையை உடைத்து கொடுக்க முயன்றனர். அப்போது மாத்திரைக்குள், சிறு கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

டாக்டர் தனசேகரன், அவர்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது, உயரதிகாரிகளுக்கு, மாத்திரையில் கம்பி இருந்ததை தெரிவித்து, உரிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

ஒருவேளை அந்த சிறுமி அந்த மாத்திரையை உடைக்காமல் சாப்பிட்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும் என்கின்றனர் மக்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...