நீட் தேர்வை எதிர்த்து ஐ.நாவில் முழங்கிய தமிழக மாணவி!

அக்டோபர் 05, 2019 442

ஜெனிவா (05 அக் 2019): நீட் தேர்வை எதிர்த்து ஐ.நாவில் மதுரை மாணவி பிரேமலதா உரையாற்றியுள்ளார்.

மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தை சேர்ந்த பிரேமலதா என்ற மாணவி ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நீட் தேர்வை எதிர்த்து பேசியுள்ளார்.

மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள், இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்துவது குறித்து பேச அவருக்கு அழைப்பு வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதி அங்கு பல்வேறு நாட்டு மாணவர்களிடையே நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரேமலதா கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்தி, இந்திய கல்வி கொள்கைகளை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அங்கு அவர் நடித்த கல்வி குறித்த குறும்படம் திரையிடப் பட்டது. அது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் நீட் தேர்வு குறித்து விமர்சித்துள்ளார். நீட் தேர்வு தமிழகத்தில் எந்த அளவுக்கு மாணவர்களின் மருத்துவ கனவை தவிடு பொடியாக்கியுள்ளது என்பதையும் அனிதா போன்ற மாணவிகளின் தற்கொலைகளை சுட்டிக் காட்டி உரையாற்றியுள்ளார். மேலும் இதற்கு ஒரு தீர்வு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே ஐ.நா சென்று திரும்பிய பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. ஐ.நாவில் உரையாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக மாணவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...