திமுக தோல்வி அடைய மோடியே காரணம் - பகீர் கிளப்பும் ஸ்டாலின்!

அக்டோபர் 05, 2019 318

சென்னை (05 அக் 2019): 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைய மோடியே காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்து விலகிய புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன், தனது ஆதரவாளர்கள் மூன்றாயிரம் பேருடன், திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், ராதாபுரம் உள்ளிட்ட 15 தொகுதிகளில் அதிமுக தில்லுமுல்லு செய்து வெற்றிபெற்றதாக குற்றம்சாட்டினார். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போதே பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வருவதை தடுத்ததாகவும் சாடினார்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளோடு சேர்த்து ராதாபுரத்திலும் திமுக வெற்றிபெறும் என மு.கஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...