நகைக்கடை கொள்ளையை அடுத்து திருச்சியில் அடுத்த அதிர்ச்சி!

அக்டோபர் 06, 2019 836

திருச்சி (06 அக் 2019): திருச்சியில் நகைக்க்கடை கொள்ளை பரபரப்பு அடங்கும் முன்பே இன்னொரு திருட்டு அரங்கேறியுள்ளது.

திருச்சி தாளக்குடி பகுதியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.இங்கு 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தையல் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த பயிற்சி மையத்தின் கதவை உடைத்துக்கொண்டு திருடுவதற்காக 2 திருடர்கள் உள்ளே வந்துள்ளனர்.அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதை பார்த்ததும் அவர்கள் இருவரும் வெளியில் சென்றனர்.தொடர்ந்து வாசலில் இருந்த குப்பைக்கூடையை முகமூடியாக்கி மீண்டும் அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்துஅங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2500 பணத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பயிற்சி மையத்தின் நிர்வாகி சமயபுரம் டோல்கேட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருச்சியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...