ஆயுத பூஜை - விஜயதசமி - முதல்வர் துணை முதல்வர் வாழ்த்து!

அக்டோபர் 06, 2019 236

சென்னை (06 அக் 2019): ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வ்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை கொண்டாட உள்ள தமிழக மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று, சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட எங்களது உளமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...