தேச துரோக வழக்குக்கு எதிராக கொந்தளித்த விஜய்காந்த்!

அக்டோபர் 06, 2019 303

சென்னை (06 அக் 2019): மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தொடரப் பட்டுள்ள தேச துரோக வழக்குக்கு எதிராக தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தேசத்துக்கு எதிராக வேறுபட்ட கருத்துக்களைப் பதிவு செய்வது, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது மட்டுமே தேசதுரோக வழக்காகப் பார்க்க முடியும். தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த, கடிதம் எழுதுவதையெல்லாம் தேசிய குற்றமாக ஏற்பது சரியல்ல. இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பேர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியதுக்காக தேசதுரோக வழக்குப் பதியப்பட்டிருந்தால், அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாகப் பகிர உரிமையை அனைவருக்கும் தர வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியிலிருந்து வரும் தேமுதிக, தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்களையே கூறிவந்த நிலையில் தற்போது இவ்வாறு அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...