செல்ஃபி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்!

அக்டோபர் 07, 2019 502

கிருஷ்ணகிரி (07 அக் 2019): செல்ஃபி எடுக்க முயன்ற 4 பேர் அணையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், கனிதா, சினேகா, நிவேதா ஆகிய 4 பேர் ஆயுதப் பூஜை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக நேற்று காலை ஊத்தங்கரையில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்த்தனர்.

இதையடுத்து திரையரங்கு விட்டு வெளியே வந்த அவர்கள், அருகில் உள்ள பாம்பாறு அணையை சுற்றி பார்க்க சென்றனர். அணையில் அதிக அளவில் தண்ணீர் செல்வதை பார்த்த இவர்கள், அணையின் ஓரத்தில் நின்று செல்பி எடுக்க முற்பட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக இவர்கள் நான்கு பேரும் அணைக்குள் தவறி விழுந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஊத்தங்கரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு நான்கு பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதையடுத்து நான்கு பேரின் உடலையும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...