திருச்சி நகைக்கடை கொள்ளையில் பல புள்ளிகளுக்கு தொடர்பு?

அக்டோபர் 07, 2019 1190

திருச்சி (07 அக் 2019): திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடத்த நகைக்கொள்ளை விவகாரத்தில் திருவாரூரில் அதிமுக பிரமுகரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் திருச்சியில் உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் சுவற்றை துளையிட்டு 13 கோடி மதிப்பீட்டில் உள்ள நகை,வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகனையும், அவனது அக்காமகன் சுரேஷ்யும் தேடி வருகிறது காவல்துறை.

இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகையோடு பிடிபட்ட திருவாரூர் அதிமுக பிரமுகரின் மகனும், சசிகலா சகோதரர் திவகரனின் ஆதரவாளருமான மணிகண்டனையும், முருகனின் அக்கா கனகவள்ளி உள்ளிட்டோரை முதற்கட்டமாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிறகு 6 ம் தேதி மாலை முருகனின் அண்ணன் மகன் முரளியோடு மற்றொருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி திருவாரூரை சேர்ந்த மாறன் என்கிற திருமாறனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நகைக்கடை கொள்ளையில் பல புள்ளிகள் சிக்கலாம் என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...