ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை - காவல்துறை கண்காணிப்பாளரை மாற்ற கோரிக்கை!

அக்டோபர் 08, 2019 623

புதுக்கோட்டை (08 அக் 2019): ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதித்த புதுக்கோட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செல்வராஜை பணியிடமாற்றம் செய்யக்கோரி பாஜக சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அனுமதி மறுத்துள்ளார்.

இதனால் எஸ்.பி.செல்வராஜ் மீது கோபம் கொண்ட பாண்டியராஜ், அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், எஸ்.பி. செல்வராஜ் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், அரசியல் காரணங்களுக்காகவும், ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களுக்காகவும் அவர் இது போல் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த முறையும் இதேபோல் தான் அவர் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செல்வராஜை பணியிடமாற்றம் செய்யக்கோரி அமித்ஷாவுக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...