நிர்மலா தேவியால் நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு!

அக்டோபர் 09, 2019 412

ஸ்ரீவில்லிபுத்தூர் (09 அக் 2019): மாணவிகளை தவறாக ஈடுபடுத்த முயன்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கம்போல் இன்று விசாரணைக்காக நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது ,அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்த கூட்டு சதி செய்தது உட்பட 8 பிரிவுகளின் கீழ் உள்ள குற்றச்சாட்டை 3 பேரும் செய்தது உண்மையா என மூவரிடமும் கேட்டார்.

அதற்கு 3 பேரும் தாங்கள் இந்த குற்றச்சாட்டை செய்யவில்லை எனவும், இது பொய் வழக்கு எனவும் தெரிவித்தனர். நிர்மலா தேவி கூறுகையில், நான் மாணவிகளை குழந்தையாகத்தான் பார்த்தேன். எந்த தவறும் செய்யவில்லை என நீதிபதியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரும் வரும் 23 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையடுத்து நீதிமன்றத்தின் வெளியே நிர்மலா தேவி மயங்கி விழுந்ததால் நீதிமன்ற வளாகம் பரபரப்பானது. அவரின் நெஞ்சை தடவி கொடுத்து காவலதுறையினர் ஆசுவாசப்படுத்தினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...