கிருஷ்ணசாமி திடீர் மனமாற்றம்!

அக்டோபர் 10, 2019 730

சென்னை (10 அக் 2019): நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சில கோரிக்கைகளை முன்வைத்து மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தோம். ஆனால் அ.தி.மு.க. கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க.வை நம்பி ஏமாற்றம் அடைந்தோம்.

எனவே , நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கிடையாது என தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...