தக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை!

அக்டோபர் 10, 2019 333

சென்னை (10 அக் 2019): வெங்காயத்தை தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளது.

வட மாநிலங்களில் பெய்த மழையால் வெளிமாநிலங்களில் இருந்து வெங்காய வரத்துக் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காய விலை அதிகமானது. சில இடங்களில் 100 ரூபாய் வரை விற்கும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்து நிலைமையை ஓரளவு சமாளித்தது. அதையடுத்து வெங்காய விலை கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் அடுத்ததாக தக்காளியின் விலை அதிகமாகி வருவது பொதுமக்களுக்கு சுமையாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 40 ரூபாயாக இருந்த தக்காளியின் விலை தற்போது 54 ரூபாயாக உயர்ந்துள்ளது. மும்பையில் 54 ரூபாயாகவும், கொல்கத்தாவில், 60 ரூபாய்க்கும் டெல்லியில் ஒரு கிலோ ரூ.80 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...